தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’ஆர்.ஏ. புரம் விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும்..!’ - ஜி.வி.பிரகாஷ்குமார் - ஜிவி பிரகாஷ் குமார்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஐங்கரன் திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று(மே 10) நடைபெற்றது.

’ஆர்.ஏ புரம் விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்..!’ - ஜி.வி.பிரகாஷ்குமார்
’ஆர்.ஏ புரம் விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்..!’ - ஜி.வி.பிரகாஷ்குமார்

By

Published : May 10, 2022, 10:36 PM IST

'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஐங்கரன்'. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்து நடித்துள்ளார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இப்படம் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஒருவழியாக கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் மீண்டும் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் 12ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இதுகுறித்து ஜிவி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் ரவி அரசு உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிவி. பிரகாஷ்

அப்போது இதுகுறித்து ஜிவி.பிரகாஷ்குமார் கூறும்போது, “நான்கு வருட கடும் உழைப்பிற்குப் பிறகு இப்படம் வெளியாக உள்ளது. மீடியாவின் ஆதரவுக்கு நன்றி. திறமையானவர்களை ஊக்குவிக்கும் படமாக இது இருக்கும். இப்படத்தின் கலை இயக்குநருக்கு நிச்சயமாக நிறைய விருதுகள் கிடைக்கும். சமூக கருத்துள்ள அதிரடி படத்தில் இப்போதுதான் முதன்முதலாக நடித்துள்ளேன்.

புதிய கண்டுபிடிப்பாளர்களை இந்த சமூகம் அரவணைக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படம் சொல்ல வருவது. ஆர்.ஏ. புரம் ஆக்கிரமிப்பு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். இதுதொடர்பாக துறைரீதியான அலுவலர்கள் தலையிட்டு இப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க கோரிக்கை வைக்கிறேன்” எனக் கூறினார்.

இயக்குநர் ரவி அரசு பேசுகையில், “இன்னும் இருபது ஆண்டுகளில் பேட்டர்ன் ரைட்ஸ்கான வழக்குகள்தான் அதிக அளவில் இருக்கும். தமிழ்நாட்டில் இளம் திறமையானவர்களுக்கானத் தகவல்கள் இங்கு இல்லை. அதற்கு பள்ளிகள் மட்டுமே காரணமல்ல பெற்றோர்களும்தான். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

இப்படத்தில் ஆழ்துளைக் கிணறு தொடர்பான காட்சி குறித்து அறம் படம் போல் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், நான் இதன் கதையை 2014ஆம் ஆண்டே பதிவு செய்துவிட்டேன். தற்போது வரை 200 திரையரங்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், படம் வெளியான பிறகு நிச்சயம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Powerful people's make powerful films - உதயநிதி பற்றி சிலாகித்த சிவகார்த்திகேயன்!

ABOUT THE AUTHOR

...view details