கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் மதுஸ்ரீ குரலில் இடம் பெற்றிருந்த 'மல்லிப்பூ' பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தது. குறிப்பாக அந்தப் பாடலில் நடிகர் சிம்புவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.