தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'Dangerous Scientist' அவதாரம் எடுத்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி: வெளியானது ’தி லெஜெண்ட்’ டிரைலர் - தி லெஜெண்ட்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடித்த ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

'Dangerous Scientist' அவதாரம் எடுத்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி : வெளியானது ’தி லெஜெண்ட்’ டிரைலர்
'Dangerous Scientist' அவதாரம் எடுத்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி : வெளியானது ’தி லெஜெண்ட்’ டிரைலர்

By

Published : May 29, 2022, 10:49 PM IST

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் அப்படக்குழுவினரால் வெளிளியிடப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்க முயன்றுள்ளார் அண்ணாச்சி.

”அவதாரம் எடுக்குறேன்..!”, ”இனி நான் அடிக்கிற அடி மரண அடியா இருக்கும்..!”, “ இந்த நாட்டு மக்களுக்கு என் படிப்பு பயன்படணும்..!’ போன்ற அக்மார்க் கமர்சியல் ஹீரோவிற்கான வசனங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. இன்னும் இது போன்ற மூன்று படங்களில் நடித்து விட்டு, யாருக்கு தெரியும்.. அரசியல்ல கூட அண்ணாச்சி குதிக்கலாம்.

மேலும், இப்படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் நடித்துள்ளார். அவர் டப்பிங் செய்வதற்குள் இறந்துவிட்டார் போலும், ஆகையால் அவரது காட்சிகளில் வசனங்கள் லைவ் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யப்பட்டதே இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. மற்றபடி ஒளிப்பதிவு, இசை, காட்சியமைப்பு என அனைத்தும் பிரம்மாண்ட பொருள்செலவில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வுக்குழு அமைப்பு: தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details