தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

25ஆவது நாளை கொண்டாடும் அண்ணாச்சியின் தி லெஜண்ட் - தி லெஜெண்ட்

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜெண்ட் திரைப்படம் வெற்றிகரமான 25ஆவது நாளைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

25வது நாளைக் கொண்டாடும் அண்ணாச்சியின் ’தி லெஜண்ட்’...!
25வது நாளைக் கொண்டாடும் அண்ணாச்சியின் ’தி லெஜண்ட்’...!

By

Published : Aug 21, 2022, 5:33 PM IST

சென்னை: லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமான படம் 'தி லெஜண்ட்'. இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவான இந்தத் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது.

பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா நடித்திருந்தனர். உலகம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது.

முதல் பட ஹீரோவிற்கு இத்தனை பெரிய ஓப்பனிங் என்பது இதுவரை தமிழ் சினிமா காணாதது. இந்நிலையில், இப்படம் இன்று(ஆக.21) 25ஆவது நாளை கடந்துள்ளது. பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் படம் இப்போது வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது சாதனையான விஷயமாக திரையுலக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜெய்பீம் படம் பார்த்து கண்ணீர் விட்ட சீன மக்கள்

ABOUT THE AUTHOR

...view details