தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

The Greatest of All Time; தளபதி 68 ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! - தி கிரேட்டஸ்ட்

the greatest of all time: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(டிச.31) வெளியானது.

The Greatest of All Time
தளபதி 68

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 6:20 PM IST

Updated : Dec 31, 2023, 7:09 PM IST

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை, ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை படத்திற்குப் பிறகு, 20 வருடம் கழித்து விஜய் - யுவன் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

கடந்த மே 21ஆம் தேதி நடிகர் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அறிவிப்பு வீடியோ வெளியானது. இதனை அடுத்து, ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ கடந்த அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. அந்த வீடியோவில், புதிய கெட்டப்பில் இருந்த விஜய்யின் லுக் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் ’தளபதி 68’ படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு, தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில், தளபதி 68 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

The Greatest of All Time எனவும், (light can devaour the darkness but darkness cannot consume the light) ஒளி இருளை விழுங்கலாம் ஆனால் இருளால் ஒளியை உட்கொள்ள முடியாது என எழுதப்பட்டுள்ள போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என தெரிகிறது. இப்படத்திற்கு தி வெங்கட் பிரபு ஹீரோ என்று டேக் லைன் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம்‌ வெளியாகி பரவலான வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:2023-இல் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்கள் - ஓர் சிறப்பு பார்வை!

Last Updated : Dec 31, 2023, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details