தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் தி கேர்ள்ஃபிரண்ட்! - தமிழ் சினிமா செய்திகள்

rashmika mandana: இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தி கேர்ள்ஃபிரண்ட்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 8:40 PM IST

சென்னை: ராஷ்மிகா மந்தனா தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களின் மனதிலும் தனியிடம் பிடித்துள்ள நடிகையாக வலம் வருகிறார். சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதற்கு முன்பே தெலுங்கில் வெளியான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பிரபலமானவர். இவர் தற்போது கதையின் நாயகியாக நடிக்கவுள்ள ’தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

ராஷ்மிகா மந்தனா முக்கியப் கதாபாத்திரத்தில் நடிக்கும் ’தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்து வரும் ராஷ்மிகா, தற்போது பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த புதிய படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார்.

இப்படக்குழு படம் பற்றிய ஒரு அழகான ஸ்னீக் பீக்கை (sneak peak) வெளியிட்டுள்ளது. இப்படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் ஒரு அழகான சினிமா அனுபவமாக இருக்கும் என்று ஸ்னீக் பீக் (sneak peak) உறுதியளிக்கிறது. இப்படத்திற்கு தி கேர்ள்ஃபிரண்ட் The Girlfriend என தலைப்பிடப்பட்டுள்ளது. தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் ராஷ்மிகா தனது ரசிகர்களை கவரவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

’தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவைக் கையாள்கிறார். இசைப் புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இவர்கள் இருவரும் நிச்சயமாக படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்க, வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதையும் படிங்க: மூன்றாவது நாளில் முன்னேற்றம் அடைந்த லியோ வசூல் - உலகம் முழுவதும் ரூ.200 கோடியைக் கடந்தது!

ABOUT THE AUTHOR

...view details