தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மரண மாஸ் லுக்கில் கமல்! - இன்று வெளியாகிறது விக்ரம் படத்தின் முதல் பாடல்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில் அதனையொட்டி படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் கமலின் லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மரண மாஸ் லுக்கில் கமல்!
மரண மாஸ் லுக்கில் கமல்!

By

Published : May 11, 2022, 2:51 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள ”பத்தல பத்தல” என்ற பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இதற்கான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் மிகவும் மாஸான லுக்கில் கமல்ஹாசன் இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் இதுபோன்ற தோற்றத்தில் வருவதால் இப்போதே இப்பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க:நேரு உள்விளையாட்டு அரங்கில் விக்ரம் இசை வெளியீட்டு விழா!

ABOUT THE AUTHOR

...view details