ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61ஆவது படத்திற்கு 'துணிவு' என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படத்திற்கு பிறகு அஜித் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.