தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு - நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி! - Actor Karthi Fan Club Treasurer Vinod

தன்னுடைய ரசிகர் மன்ற பொருளாளர் கே.வினோத்தின் மறைவிற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு - நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி!
ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு - நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி!

By

Published : Jan 29, 2023, 7:30 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர், நடிகர் கார்த்தி. 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த கார்த்தி தொடர்ந்து பல வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அவருக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மற்ற தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிகளிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளன.

நடிகர் கார்த்திக்கின் ரசிகர் வினோத் (வயது 29). அவரது தந்தையின் பெயர் குமார், தாயின் பெயர் சாந்தி. சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார்.

இந்நிலையில் வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஆட்சிகள் மாறினாலும் சாதிக்கொடுமைகள் மாறவில்லை - இயக்குநர் பா.இரஞ்சித் வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details