தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உதயநிதி அடுத்த படத்தின்‌ இயக்குநர் இவரா? - rajkamal international

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும்‌ படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி அடுத்த படத்தின்‌ இயக்குநர் இவரா?
உதயநிதி அடுத்த படத்தின்‌ இயக்குநர் இவரா?

By

Published : Aug 9, 2022, 9:20 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் உதயநிதி நடிக்கும் புதிய படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இப்படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

தற்போது இப்படத்தை இயக்குவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் முருகேசன் தான் அந்த இயக்குநர் என்று கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் சசிகுமார் நடித்த ’கிடாரி’ மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்த ’குயின் வெப் சீரிஸ்’ ஆகியவற்றை இயக்கியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின்‌ வெற்றியை தொடர்ந்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்தடுத்து படங்களையும் தயாரிக்க உள்ளார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிட்டி தொடர்பான படங்கள் பண்ண ஆசை - 'விருமன்'இயக்குநர் முத்தையா

ABOUT THE AUTHOR

...view details