இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கிய ’துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். இப்படத்திற்கு அவரது அண்ணன் செல்வராகவன் தான் முக்கிய புள்ளி என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் நடிக்க முதலில் தனுஷ் மறுத்த நிலையிலும் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். படமும் வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் செல்வராகவன். பின்னர் ’புதுப்பேட்டை’ என்ற படத்தையும் தனது தம்பி நடிப்பில் இயக்கினார். இரண்டு படங்களும் வெற்றி அடைந்தன. அதன்பிறகு இருவரும் தனித்தனியாக படம் பண்ணத்தொடங்கினர்.
செல்வராகவன் மிகப்பெரிய இயக்குநராகவும், தனுஷ் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து வந்தனர். அதன்பின் இவர்கள் இருவரும் இணையவில்லை. தற்போது ’நானே வருவேன்’ என்கிற திரைப்படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தத் திரைப்படம் செல்வராகவன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் தனுஷுக்கு முக்கியமாக திரைப்படமாகவும் உள்ளது.