தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'The cholas are back': பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியானது! - Ponniyin Selvan Part 2 songs

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 29, 2023, 11:10 PM IST

எழுத்தாளர் கல்கியின் பொன்னியில் செல்வன் நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட மேக்கிங் மற்றும் நடிகர்கள் தேர்வு பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கும் படத்தைப் பார்க்க ஆர்வத்தைத் தூண்டியது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் ஆதித்த கரிகாலனாக நடிப்பில் மிரட்டியிருந்த விக்ரம் இரண்டாம் பாகத்திலும் தனது கதாபாத்திரத்துக்குரிய ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரம் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்,

'சின்ன வயதில் இருந்து என்னை இந்த மேடையில் நிறுத்தி வைத்துள்ள தமிழ் மக்களுக்கு நன்றி. அதன் உணர்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று தம்பி சிம்புவிற்கு தெரியும். இது தொழில் அல்ல கடமை. சந்தோஷமாக இருக்கிறேன். அதற்கு சம்பளமும் தருகிறார்கள்.

சிறந்த கலைஞர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. சில கைவிட்டும்போனது, இந்தப் படம்போன்று. மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்ளும் நபரில் நானும் ஒருவன். முதலாமானவர் பாரதிராஜா. இப்படிபட்ட‌ படத்தை இயக்கி விட்டு அமைதியாக மணிரத்னம் அமர்ந்திருக்கிறார். இது எங்கே போகும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. துபாயில் ஏஆர் ரகுமான் ஆர்கஸ்ட்ராவில் பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் பொறாமைப்பட நேரமில்லை. வாழ்க்கை சிறியது. சினிமா வாய்ப்பு இன்னமும் சிறியது. அதில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒன்றாக இருந்து ரசிக்க வேண்டும். காதலா வீரமா என்றார்கள். காதலுடன் கலந்த வீரம் வேண்டும். காதலும் வீரமும் இன்றி தமிழ் கலாசாரம் கிடையாது. இதுதான் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பக்திமார்க்கம் பிறகு வந்ததுதான் ‌. உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்பதை இப்படத்தில் மீண்டும் நம்மிடம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். இதில் யாராவது சொதப்பினாலும் கனவு கலைந்துவிடும். இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம். இதனை தூக்கிப்பிடிக்க வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் இவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன். இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு உள்ளது.

இதுபோன்ற வரலாற்று படம் எடுக்க முடியாது என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால், வீரம்னா என்னனு தெரியுமா பயம் இல்லாதது போன்று நடிப்பது. நானும் மணிரத்னமும் இணையும் படம் பற்றி இப்போது பேச வேண்டாம். இது பொன்னியின் செல்வன் 2க்கான மேடை’ என முடித்தார்.

இதையும் படிங்க: விரைவில் இணையும் விஜய் - வெற்றிமாறன் மெகா கூட்டணி… ரகசியம் உடைத்த பிரபல இயக்குநர்!

ABOUT THE AUTHOR

...view details