தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மஞ்சு வாரியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு - certificate of appreciation to Manju Warrior

நேர்மையாக வரி செலுத்துபவர் என்று நடிகை மஞ்சு வாரியருக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

மஞ்சு வாரியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு
மஞ்சு வாரியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு

By

Published : Jul 6, 2022, 6:55 PM IST

’அசுரன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் மலையாள நடிகையான மஞ்சு வாரியர். மலையாள சினிமாவில் எவர்கிரீன் நடிகையாக வளம் வருகிறார். சில நாள்களுக்கு முன்னர் வெளியான மஞ்சு வாரியரின் ”கிம்..கிம்...கிம்” பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரை பாராட்டி மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மறைமுக வரிகள் மற்றும் வாரியம் ஆண்டுதோறும் முறையாக வரி செலுத்துவோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவது வழக்கம்.

பாராட்டு சான்றிதழ்

அதன்படி இந்த வருடம் முறையாக வரி கட்டியதால் மலையாள நடிகையான மஞ்சு வாரியரை பாராட்டி இந்த சான்றிதழை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:முதல் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசிய ஆண்ட்ரியா!

ABOUT THE AUTHOR

...view details