இந்தியாவின் 68ஆவது தேசிய விருதுகள் இன்று(ஜூலை 22) மாலை அறிவிக்கப்படவுள்ளது. கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு திரையரங்குகள் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தன. தமிழ் சினிமாவில் படங்களும் அதிக அளவில் வெளியாகவில்லை. இதனால் தமிழ் சினிமா ஸ்தம்பித்து போய் இருந்தது.
மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. குறிப்பாக சூர்யாவின் சூரரைப்போற்று, ஆர்.ஜே.பாலாஜியின் மூக்குத்தி அம்மன், க/பெ.ரணசிங்கம், பொன்மகள் வந்தாள், பென்குயின் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. இதில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ.ரணசிங்கம்’ படமும் வெற்றிபெற்றது. போஸ் வெங்கட் இயக்கி திரையரங்குகளில் வெளியான ’கன்னிமாடம்’ மற்றும் புதுமுகங்கள் நடித்த ’காவல்துறை உங்கள் நண்பன்’ உள்ளிட்ட படங்களும் நல்ல வரவேற்பைப்பெற்றன. மேலும் இந்தப் படங்கள் எல்லாம் தேசிய விருதுகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.