நடிகர் விஜய் நடித்த ’தெரி’, ’மெர்சல்’, ’பிகில்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி தற்போது ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, அவருக்கு திரை பிரபலங்கள் ரசிகரகள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “எனது பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும், சிறந்த பிறந்தநாள்”, என பதிவிட்டுள்ளார்.