ஐதராபாத்:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த அக்.19 ஆம் தேதி வெளியான திரைப்படம், லியோ. ஆங்கிலத்தில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவலாக உருவாகியுள்ள இப்படம், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸிலும் இணைந்துள்ளது எனலாம்.
மேலும் இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வழக்கம்போல் ராக்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ - லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.
பல பிரச்னைகளைக் கடந்து வெளியான இப்படம் முதல் நாளிலேயே நல்ல வசூல் பெற்று வரலாறு படைந்ததது. அதாவது முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. மேலும் உலக அளவில் இந்திய படம் பெற்ற அதிகபட்ச வசூல் என்றும் கூறப்பட்டள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தின் வசூலையும் லியோ முறியடித்து சாதனை படைத்தது.