இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை எடுத்து முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் விஜயின் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் விஜயின் படத்தை இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி பேசியுள்ளார். 'விக்ரம்' படம் வெளியானவுடன் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்தார்.
மேலும் தளபதி 67 திரைப்படம் மாஸாகவும் கிளாஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கெனவே இவர்களது கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் வசூல் வேட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறனின் விடுதலை!