நடிகர் விஜய் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’இல் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகிபாபு, ஷியாம், என பல நட்சத்திரங்கள் உடன் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் தலைப்பு குறித்த செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. இந்தப்படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைத்துள்ளதாக இணையத்திலும், சில சினிமா வட்டாரங்களிலும் பேசி வருகின்றனர்.