தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில், தங்களது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, ஹரீஷ்கல்யாண் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய ராம் சரண்..! - தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய ராம் சரண்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தெலுங்கு நடிகர் ராம்சரண் தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Ram charan
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண், தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உலகெங்கும் வாழும் எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது வருடம் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் சேர்க்க வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடித்து நொறுக்கிய KGF 2 - அதிகரிக்கும் திரையரங்குகள்!