தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

செல்போனில் வெளியிடப்பட்ட டீசர், வெளிநடப்பு செய்த தயாரிப்பாளர்... சர்ச்சைக்குள்ளான டீசர் வெளியீட்டு விழா

"தேசிய தலைவர்" படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் எஸ். எஸ். ராஜேந்திரனின் மகன் எஸ்எஸ்ஆர் கண்ணன் தன் அப்பா பற்றி அவதூறு செய்தியை பரப்புகிறார் என்று நவமணி அவர்களுடன் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தார்.

By

Published : Oct 12, 2022, 10:24 PM IST

சர்ச்சைக்குள்ளான டீசர் வெளியீட்டு விழா!!
சர்ச்சைக்குள்ளான டீசர் வெளியீட்டு விழா!!

இசைஞானி இளையராஜா இசையில், ஜெ.எம்.பஷீர் நடிப்பில் உருவாகியிருக்கும் "தேசிய தலைவர்" படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவானது வடபழனி ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து செலுத்துவதற்காக படத்தின் இயக்குநரின் நண்பர் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்தை நன்றாக பாடி வந்த அவர் இறுதியில் வாழ்த்துதுமே இரண்டு முறை வருமா அல்லது 3 முறை வருமா என்று குழம்பிப் போனார். இந்நிகழ்வு பார்ப்போரை குழப்பம் அடைய வைத்தது.

மேலும் இப்படத்தின் டீஸர் வெளியிடுவதற்காக படக்குழுவினர் அனைவரும் தயாரான நிலையில், பத்திரிக்கையாளர்கள் திரை ஏதும் இல்லாமல் குழப்பமாக இருந்தனர், இறுதியில் படத்தின் நாயகன் பஷீர் தனது மொபைலில் டீசரை வெளியிடத் தொடங்கினார். யாருக்குமே புலப்படாமல் தங்களுக்கு மட்டுமே தெரியும் படி டீஸர் வெளியிட்ட இக்காட்சி சுற்றியிருந்தோரை நகைப்புடைய செய்தது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் ஆர் கண்ணன் பேசியபோது, தனது அப்பா எஸ் எஸ் ராஜேந்திரன் முத்துராமலிங்க தேவருடைய நெருங்கிய நண்பர் என்றும் முத்துராமலிங்க தேவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது கூட பெண் செவிலியர் வேண்டாம் என ஒதுக்கிய போது அதற்காக ஆண் செவிலியரை ஏற்பாடு செய்தது தனது தந்தை என பெருமைப்படுத்தி பேசினார்.

இதன்பின் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சங்க தலைவர் நவமணி பேசிய போது, முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டையின் எம்பி யாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணமாக அவர் 6 மாத காலம் பதவி ஏற்காத நிலையில், மருத்துவத்திற்காக ஹலோபதி அறுவை சிகிச்சைக்காக முத்துராமலிங்க தேவரிடம் கேட்டபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தன்னை பெண் செவிலியர்களும் பெண் மருத்துவர்கள் தீண்டாமல் இருந்தால் தான் அனுமதிக்க ஒப்புக் கொள்வதாகவும் அப்படி இல்லையால் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான டீசர் வெளியீட்டு விழா!!

இந்நிலையில் சசிவர்ண தேவர் இதற்காக அவருக்கு ஆண் செவிலியர் கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், ஏற்காட்டில் படப்பிடிப்பில் இருந்து இதை அறிந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் நட்பு ரீதியாக சந்திக்க தான் வந்தார் என தெரிவித்தார்.

இதனை மேடையில் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த எஸ். எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்எஸ்ஆர் கண்ணன் தன் அப்பா பற்றி அவதூறு செய்தியை பரப்புகிறார் என்று நவமணி அவர்களுடன் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் வரலாறு தெரியவில்லை என்று விவாதித்துக் கொள்ள, பின் எஸ்எஸ்ஆர் கண்ணன் டீஸர் வெளியீட்டு விழாவில் வெளிநடப்பு செய்தார். இந்த நிகழ்வு விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: யுவனுக்காக ஒரு உலக சாதனை - அசத்திய மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details