தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வரவேற்பைப் பெற்ற "டாணாக்காரன்" - போஸ் வெங்கட்

விக்ரம் பிரபு நடிப்பில், ஓடிடியில் வெளியான "டாணாக்காரன்" திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

டாணாகாரன்
டாணாகாரன்

By

Published : Apr 8, 2022, 9:17 PM IST

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனிடம் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய தமிழ் என்பவர், "டாணாக்காரன்" படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும், அஞ்சலி நாயர் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

மாயா, மாநகரம், மான்ஸ்டர் ஆகிய வெற்றி படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் "டாணாக்காரன்" படத்தை தயாரித்துள்ளது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் பல்வேறு நுண் அரசியலை வெளிக் கொண்டுவந்துள்ள "டாணாக்காரன்" திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: லாஸ்லியா- ஹரி கிருஷ்ணன்-லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் "அண்ணபூர்ணி"

ABOUT THE AUTHOR

...view details