2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் பயோபிக் கன்னட மொழியில் படமாக்கப்படுகிறது. ’அரபி’ என்ற பெயரில் தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தில் விஸ்வாஸுக்கு பயிற்சியாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அண்ணாமலையை அணுகியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாத அண்ணாமலை, ’கதையைச் சொல்லுங்கள் கேட்போம்’ எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் கூறிய கதையைக் கேட்டதும் அண்ணாமலைக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டாராம். மேலும், இந்தப் படத்தில் நடிக்க ரூ.1 மட்டுமே சம்பளம் பெற்றுள்ளாராம், அண்ணாமலை.