சென்னை:பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம், லால் சிங் சத்தா. ‘பார்ஸ்ட் கம்ப்’ என்னும் ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தினை, இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
அமீர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் வையாகம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ப்ரீதம் இசையமத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 11 முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே படத்தின் ட்ரெய்லர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.