SonyLIV தளத்தின், தமிழ் ஒரிஜினல் படைப்பாக ஈரம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள “தமிழ் ராக்கர்ஸ்” தொடர், சினிமா பைரஸி பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும்.
அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி பஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் மற்றும் ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட நடிகரின், மிகப்பெரும் பட்ஜெட் படம், இணைய திருடர்களால் இணையத்தில் வெளியிடப்படுவதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். சைபர் க்ரைம் திருட்டுக்கு எதிரான போரை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தொடர் குறித்து இயக்குநர் அறிவழகன் கூறுகையில், “ஏவிஎம் புரடக்சன்ஸ் மற்றும் சோனி லிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொடரை உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சி. சோனிலிவ் தளம் பார்வையாளர்கள் விரும்பும் வகையில், சிறந்த உள்நாட்டு படைப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் மற்றும் காவலதிகாரி ருத்ராவின் கதை.