தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"கருமேகங்கள் கலைகின்றன'' படப்பிடிப்பு நிறைவு! - சென்னை செய்திகள்

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "கருமேகங்கள் கலைகின்றன" இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

"கருமேகங்கள் கலைகின்றன” படப்பிடிப்பு நிறைவு!
"கருமேகங்கள் கலைகின்றன” படப்பிடிப்பு நிறைவு!

By

Published : Jan 14, 2023, 5:15 PM IST

சென்னை: இயக்குநர் தங்கர் பச்சான் "கருமேகங்கள் கலைகின்றன" என்னும் படத்தை இயக்கி வந்தார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் தங்கர் பச்சான் கூறும்போது, 'திரைப்படங்களுக்காக அமைக்கப்படும் அரங்கில் நான் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. காட்சிகள் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு படம் எடுத்தேன். மக்களுக்கிடையே எனது பாத்திரங்களை உலவ விடுவதற்காக ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி முடிப்பதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கும்.

மக்களிடத்தில் பெயர் பெற்ற பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோரைக்கொண்டு நேற்றோடு 'கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதையும் எடுத்துமுடித்துவிட்டேன். மனதுக்கு நிறைவான படைப்பை உருவாக்கத்தான் இத்தகைய போராட்டம் என எண்ணுகையில் சோர்வும் அயர்ச்சியும் மறைகின்றன.

இனி வரும் நாட்கள், எனக்கு படைப்பை செறிவூட்டி, உயிருள்ள படைப்பாக மாற்றுவதற்கான நாட்கள் ஆகும். இவ்வாண்டு இறுதிக்குள் என் இயக்கத்தில் மூன்று படைப்புகள் வெளிவரும் என நம்புகிறேன். இந்த தைப்பொங்கல் அனைவருக்கும் வளம் பொங்கும்; வாழ்வை வாரி வழங்கட்டும் என எங்களின் நிறுவனம் மற்றும் குழு சார்பாக வாழ்த்துகிறேன்' என்றார்.

இதையும் படிங்க:விஜய் சேதுபதியின் 'ஃபார்ஸி' வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details