சென்னை:வரும் 18 ஆம் தேதி காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி தலைமையில் இந்த தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ளனர். 2020இல் பொறுப்பேற்ற நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் தற்போது இந்த பொதுக்குழு நடைபெற உள்ளது.
இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிகளில் திருத்தம், செய்வதற்காக இந்த பொதுக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.