தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தமிழ்த்திரைப்படத்துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்த நிகழ்ச்சி! - தமிழ் திரைப்படத் துறை

தமிழ் திரைப்படத்துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்த நிகழ்ச்சியை தமிழ்த் திரையுலக பிரமுகர்களுடன் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் (என்எஃப்டிசி) நடத்தியது.

தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்த நிகழ்ச்சி!
தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்த நிகழ்ச்சி!

By

Published : Jun 26, 2022, 4:22 PM IST

'தமிழ்த் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் வணிக வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சென்னையில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆரக்கிள் மூவீஸ் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (National Film Development Corporation of India) இயக்குநர் ராஜேஷ் கண்ணா, தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் 'லொள்ளு சபா' ஜீவா, இயக்குநர்கள் தளபதி, சமந்த்ராஜ், அமுதேஸ்வர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரக்கிள் மூவீஸின் தாய் நிறுவனமான என்எஃப்டி கிரியேட்டர் எகானமி பிரைவேட் லிமிடெட் மூலம் "தமிழ்த் திரைப்படத் துறையின் நிலை மற்றும் சாத்தியக்கூறுகள்" குறித்த ஆய்வுக்காக என்எஃப்டிசி நடத்தும் கருத்து கேட்பின் முன்னோட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது பெறப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு, விளக்கப்பட்டு, என்எஃப்டிசிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கை பின் வரும் காரணங்களுக்காக பயன்படுத்தப்படும்:

* தமிழ்த் திரைப்படத்துறையின் தற்போதைய ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் உறுதிப்படுத்துதல்.

* தயாரிப்பில் உள்ள மற்றும் இன்னும் வெளியிடப்படாத திரைப்படங்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல்.

* தரமான முடிக்கப்படாத திரைப்படங்களை அடையாளம் காணுதல்.

இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். "தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்" என்று அவர் மேலும் கூறினார்.

"என்எஃப்டிசி எடுக்கும் இந்த புதிய முயற்சிக்கும், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு வியாபார ரீதியாக உதவுவதோடு வியாபார ரீதியாக ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வும் தந்து தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஆரக்கிள் மூவீஸூக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்," என்று ஜாகுவார் தங்கம் கூறினார்.

இதையும் படிங்க:’மாயோன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு : தெலுங்கில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு முடிவு..!

ABOUT THE AUTHOR

...view details