தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிக்பாஸ் சீசன் 6 - எலிமினேஷன் டாஸ்க்கால் போட்டியாளர்களிடையே கலகம் - பாப் இன்டிபென்டன்ட் பாடகரான அசல் கோலார்

தனியார் தொலைக்காட்சியில் மக்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று (அக்-9) தொடங்கப்பட்ட நிலையில் மொத்தம் 20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் கலைகட்ட தொடங்கியுள்ளது.

Etv Bharatபிக்பாஸ்  சீசன் 6 - பீதியான ஜிபி முத்து
Etv Bharatபிக்பாஸ் சீசன் 6 - பீதியான ஜிபி முத்து

By

Published : Oct 10, 2022, 3:09 PM IST

Updated : Oct 10, 2022, 8:43 PM IST

சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று கோலகலமாக தொடங்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் தற்போது தொடங்கி விட்டது.

பிக்பாஸ் சீசனின் முதல் பங்கேற்பாளாராக பிரபல யூட்யூபர் ஜிபி முத்து நுழைந்தார். கடந்த இரண்டு சீசன்களாக இவர் பங்கேற்பார் என கூறப்பட்ட வந்த நிலையில் இந்த சீசனில் எண்ட்ரி ஆகியுள்ளார். மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற முத்து முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததால் உள்ளே யாருமில்லை என பயப்பட ஆரம்பித்தார்.

பின்னர் ஜிபி முத்துவிடம் பேசிய கமல்ஹாசன் மற்ற போட்டியாளர்கள் உள்ளே வர இன்னும் இரண்டு நாள்கள் ஆகும் என கூறவே பீதியடைய ஆரம்பித்தார். சீசன் ஆரம்பித்தவுடனேயே ஜிபி முத்துவின் வெள்ளந்தியான பயம் அனைத்து ரசிகர்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிபி முத்து ஆர்மி: ஜிபி முத்துவிற்கு சமூக வலைதளங்களில் பலர் ரசிகர்களாக இருந்த வந்த நிலையில் தற்போது அவருக்கு ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது. ஜிபி முத்துவையடுத்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அவரைத் தொடர்ந்து பாப் இன்டிபென்டன்ட் பாடகரான அசல் கோலார், ஷிவின் கணேசன், சின்னத்திரை நடிகர் முகமது அசீம், நடன இயக்குநர் ராபர்ட், சின்னத்திரை நடிகை ஆயிஷா ஆகியோர் வந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா, தனலட்சுமி ஆகியோரும் வந்தனர். ஒட்டுமொத்தமாக 20 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளர்.

போட்டியின் முதல் நாளான நேற்றே (அக்-9) போட்டியாளர்கள் அவர்களை கவராத இருவரை தேர்ந்தெடுத்து நேரடியாக வெளியேற்றும் எலிமினேஷனிற்கு நாமினேட் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று வெளியாகிய இரண்டு புரோமக்களும் போட்டியாளர்களிடையே கலகம் ஏற்பட்டுள்ளதை காட்டியுள்ளது.

இதையும் படிங்க:ஆரம்பிச்சாச்சு பிக்பாஸ் - போட்டியாளர்கள் விவரம்

Last Updated : Oct 10, 2022, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details