தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

முன்னாள் காதலனால் தாக்கப்பட்ட தமிழ் நடிகை.. இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் போட்டோ! - அனிகா விக்ரமன் யார்

தமிழ் நடிகை அனிகா விக்ரமன் முன்னாள் காதலனால் தாக்கப்பட்டதாக காயங்களுடன் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் காதலனால் தாக்கப்பட்ட நடிகை அனிகா விக்ரமன்
முன்னாள் காதலனால் தாக்கப்பட்ட நடிகை அனிகா விக்ரமன்

By

Published : Mar 6, 2023, 2:05 PM IST

Updated : Mar 7, 2023, 10:35 AM IST

ஹைதராபாத்:நடிகை அனிகா விஜய் விக்ரமன் அவரது முன்னாள் காதலனால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி முகத்தில் காயங்கள் உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதோடு முன்னாள் காதலன் அனூப் பிள்ளையை விட்டு பிரிந்த உடன் இழந்த தனது வாழ்க்கையை மீண்டும் பெற்றதாகவும், தனது நடிப்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பியதாகவும் விவரித்துள்ளார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "துரதிர்ஷ்டவசமாக, நான் அனூப் பிள்ளை என்பவரை காதலித்தேன். இவர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.

என் வாழ்நாளில் இப்படி ஒருவரை நான் பார்த்ததில்லை. இதையெல்லாம் செய்துவிட்டு என்னையே மிரட்டுவார். அவர், இப்படி நடந்து கொள்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்பதுதான் உண்மை. அவர் என்னை இரண்டாவது முறையாக தாக்கியபோது,​ பெங்களூரு போலீசாரிடம் புகார் அளித்தேன். இவர் முதல் முறையாக என்னை தாக்கியது சென்னையில் தான். அந்த தாக்குதலுக்கு பிறகு அவர் என் காலில் விழுந்து கதறி அழுதார். என்னை மன்னித்து விடு என்று கெஞ்சினார்.

இதையும் படிங்க:கன்னட படத்தில் அறிமுகமாகும் WWE சாம்பியன் தி கிரேட் காளி

நான் இலகிய மனதுடன் அதை மன்னித்தேன். ஆனால், இரண்டாவது முறையும் என்னை தாக்கினார். இவரை நம்பி சில ஆண்டுகளாக நான் பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டேன். இதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால், என்னை விடாமல் துரத்துகிறார். அவருக்கு நான் ஷூட்டிங் போவதில் விருப்பமில்லை. ஆகவே, போகாமல் இருக்க எனது ஸ்மராட்போனை உடைத்த சம்பவங்களும் உண்டு.

எனக்கு தெரியாமல், எனது ஸ்மார்ட்போன் கால்களையும், வாஸ்ட் அப் உரையாடல்களையும் கண்காணித்து வந்தார். இறுதியாக பெங்களூருவில் என்னை தாக்கினார். எனது முகத்தை காயப்படுத்தினார். இந்த முகத்தை வைத்து எப்படி நடிப்பாய் என்று பார்க்கிறேன் என்று ஏளனம் செய்தார். நான் கண்ணாடியைப் பார்த்து அழும்போது கூட, "உன் நாடகம் நன்றாக இருக்கிறது" என்று மன உலைச்சல் அடையும்படி பேசினார். இப்போது அவரை விட்டு முழுமையாக விலகிவிட்டேன். கடவுளின் அருளால் என்னால் சமாளிக்க முடிந்தது. ஆகவே தைரியமாக அவர் மீது புகார் அளித்துள்ளேன்.

இதனிடையே அவர் தலைமறைவாக இருந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். இப்போது அவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கிறார். ஆகவே, இதையெல்லாம் வெளிப்படையாக இங்கு எழுதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் காயமடைந்த போட்டோக்களும் பகிரப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தீயாய் பரவிவருகிறது.

இதையும் படிங்க:சர்க்கரை நோயால் அவதிப்படும் "பிதாமகன்" தயாரிப்பாளர்: உதவி வேண்டி வீடியோ வெளியீடு

Last Updated : Mar 7, 2023, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details