சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று (ஜூன் 3) வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
’பல நாள் கனவு நினைவானது, லோகேஷுக்கு நன்றி..! ‘ - சூர்யா - விக்ரம் ரிலீஸ்
கமல் ஹாசன் நடிப்பில் நேற்று (ஜூன் 3) வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து சூர்யா இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
’பல நாள் கனவு நினைவானது, லோகேஷுக்கு நன்றி..! ‘ - சூர்யா
இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ‘ரோலெக்ஸ்’ என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். அவரது நடிப்பு அபாரமாக உள்ளதாக படத்தை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "கமல் அண்ணா... எப்படி சொல்றது..?, உங்களுடன் சேர்ந்து திரையைப் பகிர்ந்ததன் மூலம் என் கனவு நினைவானது. இதை நிகழ்த்திய இயக்குநர் லோகேஷுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உலக நாயகனுக்காக சாகசம் செய்த சிலிண்டர் நாயகன்
Last Updated : Jun 4, 2022, 5:22 PM IST