நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தத் திரைப்ப்டம் ஓர் பான் இந்தியா படமாக உருவாகிறது.
சூர்யா 42 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - சிறுத்தை சிவா
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ’வீரம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா படத்திற்கு தேவி ஸ்ரீ இசை அமைக்கிறார். சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம் 1, 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார். இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல்வேறு நடிகைகள் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது திஷா பதானி நடிக்க உள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஆக.21) பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு எழுத்தாளர் மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.
இதையும் படிங்க: சிறிய படங்களை மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் திரையிட வேண்டும்… பாக்யராஜ் கோரிக்கை