இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.