நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 41’ திரைப்படத்தை இயக்குநர் பாலா இயக்குவதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வந்தது. இந்நிலையில், படப்பிடிப்பில் இயக்குநர் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சூர்யா ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் செட்டுக்கு வர காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டு ’சூர்யா 41’ படப்பிடிப்பில் பாலாவுடன் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டார்.