நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜல்லிக்கட்டை மையக்கருவாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சித்திரைத் திருநாளை முன்னிட்டு வாடிவாசல் படப்பிடிப்பில் உள்ள காளையுடன் வந்து சூர்யா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சூர்யா கூறிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து - எப்படி சொல்லியிருக்கிறார் தெரியுமா? - சினிமா தொடர்பான செய்திகள்
நடிகர் சூர்யா தமிழ்ப்புத்தாண்டிற்காக மாட்டுடன் வந்து வித்தியாசமான முறையில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சூர்யாவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த வீடியோவை சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்போடு உருவாகி வருகிறது. மேலும் நடிகர் சூர்யா இப்படத்திற்காக ஜல்லிக்கட்டுப்போட்டி சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க:இந்தியில் பேசிய பயங்கரவாதி, தமிழ் கத்துகிட்டு வா என்ற விஜய்: மீம்ஸ்கள் வைரல்