சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவா- சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம், சூர்யா 42. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தில், சூர்யா உடன் திஷா பதானி நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
சென்னையில் தொடங்கிய 'சூர்யா 42' படப்பிடிப்பு! - Cinema latest update
சென்னையில் சூர்யா 42 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
சென்னையில் தொடங்கிய ‘சூர்யா 42’ படப்பிடிப்பு!
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (டிச.16) ‘சூர்யா 42’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளதால், படத்தின் அறிவிப்பு முதலே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க:வணங்கான் திரைப்படம் … சூர்யாவை விலகச் சொன்ன பாலா!!