நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்குப்பிறகு, தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்டப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு ரஜினி அடுத்து, எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ரஜினி நடிக்கும் இரண்டு படங்களை லைகா தயாரிக்க உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால், ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று பேசப்படுகிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை லைகா தயாரித்திருந்தது.