தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2022, 12:29 PM IST

Updated : Jun 28, 2022, 2:24 PM IST

ETV Bharat / entertainment

மனம் திறந்த சூப்பர் ஸ்டார்.. வாழ்க்கையை திசை திருப்பிய அந்த ஒரு தருணம்...

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் சென்று பார்த்து ரசித்துள்ளார். நாடக குழுவினரை இல்லத்திற்கு அழைத்து அவர் பாராட்டியுள்ளார். மேலும் ஆரம்ப காலத்தில் தான் நாடகத்தில் நடித்தது தொடர்பான அனுபவங்களையும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அந்த ஒரு தருணம் தான் எனது வாழக்கையை திசை திருப்பியது... ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அந்த ஒரு தருணம் தான் எனது வாழக்கையை திசை திருப்பியது... ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடக குழுவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாக ஜூன் 26-ஆம் தேதியை மாற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த சம்பவம் தொடர்பாக ஒய்.ஜி. மகேந்திரன் கூறியதாவது: "உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி வருகிறார்.

குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன். அதை தொடர்ந்து ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நாரதகான சபாவில் நடைபெறும் சாருகேசி நாடகத்தில் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

சொன்னதைப் போலவே அவர், அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார். என்னை கட்டிப்பிடித்த அவர், இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜியை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை.

மனம் திறந்த சூப்பர் ஸ்டார் .. வாழக்கையை திசை திருப்பிய அந்த ஒரு தருணம்...

மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார். அன்று இரவு நாடகத்தின் கதாசிரியர் வெங்கட்டை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வெகு நேரம் பேசியுள்ளார்.

மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அந்த ஒரு தருணம் தான் எனது வாழ்க்கையை திசை திருப்பியது...

அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனிடையே, ஜூன் 25-ஆம் தேதி ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. சாருகேசி குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறினார்கள். ஜூன் 26 அன்று ஒட்டுமொத்த குழுவும் ரஜினிகாந்தின் இல்லத்திற்குச் சென்றோம். அப்பொழுது ஒவ்வொருவரையும ரஜினிகாந்த் பாராட்டினார்.

மேலும் அவரது நாடக அனுபவங்களைப் பற்றி கூறினார். "ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ் பகதூர் அழைத்து சென்றிருந்தார். அன்று துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்குப் பதிலாக என்னை நடிக்கும்படி அந்த குழுவினர் கேட்டுக்கொண்டனர்," என்று ரஜினி தெரிவித்தார்.

மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அந்த ஒரு தருணம் தான் எனது வாழ்க்கையை திசை திருப்பியது...

ஒத்திகையில் அவரது நடிப்பைக் கண்டு வியந்த குழுவினர் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவரது நண்பரின் ஊக்கத்தில் அந்த நாடகத்தில் துரியதோணனாக நடித்தார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். பாராட்டு பெற்ற அந்த ஒரு தருணம் தான் எனது வாழ்க்கையை திசை திருப்பியது என்று அவர் கூறினார்.

அது தான் தனது நடிப்பு வாழ்க்கைக்கு ஆரம்பமாக இருந்தது என்றும் அவர் பெருமையாகக் கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினி ஒரு ரசிகராக பழகியது எங்கள் வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்" என்று ஒய்.ஜி. மகேந்திரா கூறினார்.

இதையும் படிங்க: இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்று ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த்

Last Updated : Jun 28, 2022, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details