சென்னை:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவ்ராஜ் குமார், மோகன் லால், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று லைகா புரொடக்சன்ஸ் நிறுவனர் சுபாஷ்கரன் பிறந்தநாளை ஒட்டி ரஜினி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். இதனை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசை அமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வந்த தகவலின் படி ரஜினிகாந்த் இப்படத்தில் முஸ்லீம் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து லைகா புரொடக்சன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் பிறந்தநாளில் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் "#தலைவர் 170" திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.