சென்னை: மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பகுதியில் 'ஷெரட்டன் கிராண்ட் ' நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூர்யா, ஷாலினி அஜித்குமார் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பலர் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.
நயன் - விக்கி திருமணம்: மாங்கல்யம் எடுத்துக்கொடுத்த சூப்பர் ஸ்டார்! - vignesh shivan
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்துள்ளார்.
rajini in wikki nayan marriage
புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத, நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, காலை சுமார் 10.25 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுக்க நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இதை தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள் மணமக்களை வாழ்த்திச்சென்றனர்.
இதையும் படிங்க: நயன் விக்கி திருமணத்தின் ஸ்பெஷல் மெனு - நட்சத்திரங்களுக்கு சைவ விருந்து