தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'அயோத்தி' படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. சசிகுமார் ரியாக்‌ஷன் என்ன? - kollywood updates

அயோத்தி திரைப்படம் நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம் என 'அயோத்தி' படத்தை பார்த்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 11, 2023, 1:07 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் இன்று வரையிலும் இந்திய சினிமாவில் கிளாசிக் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நிறையப் படங்களில் நடித்துவிட்டார். சமீப காலமாக அவருடைய படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை.

இந்நிலையில் இயக்குநர் R. மந்திரமூர்த்தி இயக்கத்தில் இந்த ஆண்டு சசிகுமார் நடித்து வெளியான படம் அயோத்தி. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். இப்படத்தை Trident Arts ரவீந்திரன் தயாரித்துள்ளார். சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியான போது அயோத்தி படம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் குறைவாகவே இருந்தது. சிறிய படம் என்ற கருத்தை வைத்து யாரும் திரையரங்குகளில் சென்று இப்படத்தைப் பார்க்கவில்லை. நல்ல படம் என்ற போதிலும் திரையரங்குகளில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. இந்த நிலையில் இப்படம் கடந்த வாரம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியாதும் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

அயோத்தியை சேர்ந்த ஒரு வட இந்திய குடும்பம் ராமேஸ்வரம் செல்ல தமிழ்நாடு வருகின்றனர். அப்போது அவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஒன்று நடந்து விடுகிறது. இவர்களுக்கு நடிகர் சசிகுமார், புகழ் உதவுகின்றனர். இறுதியில் அந்த குடும்பத்திற்கு என்ன ஆனது என்பதே அயோத்தி படத்தின் கதையாகும்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”அயோத்தி திரைப்படம் நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என்று பதிவிட்டுள்ளார்.

நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் கருத்துள்ள வெற்றி படம் ’அயோத்தி’... ரஜினிகாந்த் பாராட்டு!

இந்நிலையில் ரஜினிகாந்தின் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சசிகுமார், ”நடிகர் என்று சொல்லாமல் நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். நீங்கள் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது நன்றி” என பதிவிட்டுள்ளார்

ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பாராட்டியுள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அயோத்தி படத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் புதுமையான திரைக்கதையால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிட்டார் இயக்குநர் ஆர். மந்திரமூர்த்தி என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி - பிரமாண்டமாக உருவாகும் புதிய படம்!

ABOUT THE AUTHOR

...view details