சென்னை: தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவர், சுனைனா. நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர். தற்போது பன்மொழிகளில் உருவாகும் 'ரெஜினா' என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.
எள்ளோ பியர் புரொடக்ஷன் ( Yellow Bear Production LLP ) தயாரிப்பில் "ரெஜினா" படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார், சதீஷ் நாயர். இப்படம் நான்கு மொழிகளில் தயாராகிரது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் "ரெஜினா" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். மலையாள போஸ்டரை பிரபல மலையாள இயக்குநர் ஆஷிக் அபு வெளியிட்டார்.
மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட "பைப்பின் சுவட்டிலே பிரணயம்" மற்றும் "ஸ்டார்" படங்களை இயக்கிய மலையாள பிரபலம் டோமின் டி சில்வா இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். "ரெஜினா" திரைப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும்; மேலும் நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதைப் போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்று இயக்குநர் டோமின் டி சில்வா கூறியுள்ளார்.