தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங்.. 'ஜெயிலர்' குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புதிய அப்டேட்! - thalaivar update

ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 12, 2023, 8:19 PM IST

Updated : Jul 12, 2023, 10:44 PM IST

சென்னை: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 169-ஆவது படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ரோஃப், யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியக்கா மோகன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் அந்த ட்விட்டர் பதிவில், "சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங்" என்று குறிப்பிட்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், இந்த இரண்டாவது பாடல் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இன்று நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.அப்போது ரஜினிகாந்த் மொத்த படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:தமிழ் அன்னையின் தவப்புதல்வன் நா.முத்துக்குமார் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

மேலும், லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் அண்மையில் நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. மேலும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ரஜினிகாந்த்தின் 170வது படத்தை, ஜெய்பீம் படத்தின் இயக்குநர் TJ ஞானவேல் இயக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்தி ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் நடிகர் சூர்வைவை வைத்து இருளர் சமூக மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையை ஜெய்பீம் என்ற பெயரில் ஞானவேல் இயக்கிய திரைப்படம் தேசிய அளவில் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கையில் ஜிகர்தண்டாவுடன் மதுரை மாநகரில் 'பாகுபலி' இயக்குநர் - தமிழ்நாடு டிரிப் குறித்து நெகிழ்ச்சி பதிவு

Last Updated : Jul 12, 2023, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details