தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகம்: இயக்குநர் யார்? - மிர்ச்சி சிவா விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Suthu kavvum part 2
சூது கவ்வும் இரண்டாம் பாகம்

By

Published : Apr 14, 2023, 7:03 PM IST

சென்னை: 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம், சூது கவ்வும். மிகக் குறைந்த முதலீட்டில் உருவான இப்படம், பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் நலன் குமாரசாமி காமெடி கலந்து, விறுவிறுப்பாக இப்படத்தை கொடுத்திருந்தார். பாடல்களும் ரசிகர்களால் கவரப்பட்டன.

இந்நிலையில், 'சூது கவ்வும்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் 'மிர்ச்சி' சிவா நடிக்க உள்ளதாகவும், அவருக்கான கதாபாத்திரத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சத்யராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி இதில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிர்ச்சி சிவா என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. சூது கவ்வும் படத்திற்குப் பிறகு 'காதலும் கடந்து போகும்' என்ற படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். அதனைத்தொடர்ந்து ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கினார். எனினும், சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை யார் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழ் சினிமாவின் காமெடி படங்களில், தனித்துவமிக்க படமாக சூது கவ்வும் இயக்கப்பட்டிருந்தது. எனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Shalu Shammu: ஷாலு ஷம்முவின் 2 லட்ச ரூபாய் செல்போன் மிஸ்ஸிங்.. நண்பர்கள் மீது சந்தேகம் என கேஸ்!

ABOUT THE AUTHOR

...view details