தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

லியோ படப்பிடிப்பில் இணைந்த நட்சத்திர நடிகர் சஞ்சய் தத்!! - myskkin

விஜய் நடிக்கும் லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 11, 2023, 7:18 PM IST

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரப்படத்தில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், கவுதம் மேனன், மிஷ்கின், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த நடிகர்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதத்துடன் முடித்து அதன் பிறகு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் இணைந்திருப்பதால் இந்த படம் ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ (LCU)சில் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். லியோ படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் கடந்த மாதம் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய் லியோ படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் லியோ திரைப்படம் இந்த வருடம் அக்.,19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லியோ படத்தின் அப்டேட்டகள் தொடர்ந்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த வண்னம் உள்ளது. இந்த படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. சமீபத்தில் லியோ படத்தில் நடிக்கும் மிஷ்கின் தான் விஜய்யுடன் ஒரு சண்டை காட்சியில் நடித்து முடித்ததாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. நடிகர் சஞ்சய் தத் கேஜிஎஃப் திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் ஆதிரா என்னும் வில்லன் கதாபாத்திரத்திரம் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. லியோ படத்திலும் நடிகர் சஞ்சய் தத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இன்று லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: "முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்த அங்கீகாரம்" நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details