சென்னை: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை ‘Made in India’ என்ற பெயரில் பயோபிக் திரைப்படமாக வெளியாக இருப்பதை அறிவித்து உள்ளார். இந்திய சினிமாவின் தந்தையாக அறியப்படும் தாதா சாகேப் பால்கே, 1913இல் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற தனது முதல் படத்தை இயக்கினார்.
மகாராஷ்டிராவில் பிறந்த இவரது இயற்பெயர், துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஆகும். தாதா சாகேப் பால்கே, திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை லண்டனில் படித்த பின், 1913இல் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற படத்தை இயக்கினார். தனது 19 வருட திரை வாழ்க்கையில், தாதா சாகேப் பால்கே 95 படங்களையும், 27 குறும்படங்களையும் இயக்கியுள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு சினிமாவில் சாதிப்பவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை, ’தாதா சாகேப் பால்கே’ பெயரில் வழங்கி வருகிறது.
இந்நிலையில், தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை ‘Made in India’ என்ற பெயரில் நிதின் கக்கர் இயக்குகிறார். நிதின் கக்கர் இதற்கு முன்னதாக ஃபிலிமிஸ்தான், மிட்ரான், ஜவானி ஜான்மேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய பிறகு ‘Made in India’ படத்தை விநியோகம் செய்கிறார்.