தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய்சேதுபதிக்கு முன்னர் இவர்தான் எனது சாய்ஸ்.. மெரி கிறுஸ்துமஸ் இயக்குநர் கூறிய பிரபலம் யார்? - நடிகர் சைஃப் அலி கான்

Merry christmas movie Promotion: ஸ்ரீராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் வரும் ஜன.12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் ஸ்ரீராம் நேர்கானல் ஒன்றில் பங்கேற்றார்.

படப் ப்ரோமோஷனில் மும்மரம் காட்டும் மெரி கிறிஸ்துமஸ் படக்குழு
படப் ப்ரோமோஷனில் மும்மரம் காட்டும் மெரி கிறிஸ்துமஸ் படக்குழு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 6:48 PM IST

சென்னை:ஸ்ரீ ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

ஏராளமான படங்களை தன்வசப்படுத்தியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ஜவான் படத்தைத் தொடர்ந்து இந்தியில் மற்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் நடித்துள்ளார். மேலும், இருவேறு நடிப்புத் தளங்கள் கொண்ட நடிகர்கள் இப்படத்தின் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜன.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படக்குழு தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பட ப்ரோமோஷனுக்காக இப்படத்தின் இயக்குநரான ஸ்ரீராம் ராகவனுடன் சிறப்பு நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் ஸ்ரீராம், "இந்தப் படத்திற்கு முதலில் நான் விஜய் சேதுபதியை தேர்வு செய்யவில்லை. இந்த கதாபாத்திரத்துக்கு நான் முதலில் சைஃப் அலிகானை தான் தேர்வு செய்தேன். இது குறித்து அவரிடமும் முன்னதாக பேசினேன்.

ஆனால் கதையை தொடர்ந்தபோது, சைஃப் கதாப்பத்திரத்துக்கு சரியான தேர்வாக இருக்க மாட்டார் என்பதை உணர்ந்தேன். ஆனால் எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஒரு நடிகரிடம் கதை சொல்லிவிட்டு, பின்பு சரியான தேர்வாக இருக்க மாட்டீர்கள் என்று கூறுவது இலகுவான காரியம் இல்லை.

பெரும் சங்கடத்தில் நான் இதைப் பற்றி படத்தயாரிப்பாளர் ரமேஷிடம் தெரிவித்தேன். பின்னர் இது குறித்து, சைஃபிடம் பேசும்போது அவர் சற்று மனவருத்தம் அடைந்தார். அது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தக் கதை என்னுடைய மூன்று வருடங்களின் உழைப்பு. சைஃப்-ற்குப் பின்னர் யார் இதற்கு சரியாக இருப்பார் என்று யோசித்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் விஜய் சேதுபதி" எனத் தெரிவித்தார். மேலும் முதல் முறையாக விஜய் சேதுபதியும், கத்ரினா கைஃபும் இணைந்துள்ள படம் என்பதனால் தமிழ் மற்றும் இந்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

முன்னதாக இப்படத்தின் ப்ரோமோஷன் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் பங்கேற்றனர். இந்த விழாவில் விஜய் சேதுபதி நடிகை கத்ரினாவுடனான பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இதையும் படிங்க:பிரம்மாண்டமான 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்..!

ABOUT THE AUTHOR

...view details