தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை' பாடல் பாடிய பாடகி மறைவு! - ஏஆர் ரஹ்மான் இசையில் தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை பாடல்

கேரளாவில் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

By

Published : May 22, 2022, 11:04 PM IST

திருவனந்தபுரம்:பிரபல பின்னணி பாடகியும், கர்நாடக இசைக்கலைஞருமான சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் இன்று (மே 22) காலமானார். அவருக்கு வயது 46. சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

சங்கீதா, தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை' சூப்பர்ஹிட் ஆனது.

1998 ஆம் ஆண்டு வெளிவந்த 'என்னு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி' திரைப்படத்தில் இருந்து 'ஆம்பிலி பூவேட்டம்' பாடலின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.

அண்மையில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் சங்கீதா பாடிய 'தாளம் போய் தப்பும் போய்' பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கே.பி.சுந்தராம்பாள் பாடலான 'ஞானப்பழத்தே பிழிந்து' பாடலை சிறப்பாக பாடி பலரிடம் பாராட்டு பெற்றார். அந்த வகையில் தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சங்கீதா இந்தப் பாடலைப் பாடியதைப் பார்த்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவரைப் பாராட்டி 10 சவரன் தங்க சங்கிலி பரிசளித்தார்.

சங்கீதா சஜித், கேரளா மாநிலம் கோட்டயத்தை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு அபர்ணா என்ற மகள் உள்ளார். சங்கீதா சஜித் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ’முத்துநகர் படுகொலை’ ஆவணப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details