தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகிறது கமலின் விருமாண்டி? - இளையராஜா

நடிகர் ரஜினிகாந்தின் ‘பாபா’ ரீரிலீஸைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் ’விருமாண்டி’ திரைப்படமும் ரிரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகிறது கமலின் விருமாண்டி..?
ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகிறது கமலின் விருமாண்டி..?

By

Published : Dec 17, 2022, 3:53 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது 72-வது பிறந்த நாள் கடந்த 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அவரது பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியாகி தற்போது உள்ள நடிகர்களின் படங்களை விட மிகச் சிறந்த ஓபனிங்கை கொடுத்தது. இதனால் மற்ற நடிகர்களும் தனது படங்களை ரீ ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் விருமாண்டி. இப்படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்துகளை இப்படம் எதிரொலித்தது. இளையராஜா இசையில் படத்தின் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றது. இதில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படமும் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பேசப்பட்ட விஷயம் இப்போது உள்ள காலகட்டத்திற்கும் பொருத்திப் போகும் என்பதால் கமல் இந்த முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

2004ல் வெளியான இப்படத்தை இன்றைய 2K கிட்ஸ்கள் கண்டிப்பாகத் திரையில் பார்த்திருக்க வாய்ப்பில்லை அவர்களுக்கும் புதியதொரு அனுபவமாக இப்படம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறதே தவிர இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

இதையும் படிங்க: ’இனி வாரிசும் நாங்க தான், துணிவும் நாங்க தான்: ரெட் ஜெயண்ட் அதிரடி முடிவு

ABOUT THE AUTHOR

...view details