தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வசூலை வாரி குவித்த 'வாரிசு' 11 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? - varisu box office collection

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வாரிசு
வாரிசு

By

Published : Jan 23, 2023, 9:56 PM IST

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்துப் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் வெளியான முதலே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், உலகம் முழுவதும் ஏராளமான வசூலைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா, படத்தின் வசூல் குறித்து அவ்வப்போது தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அதன் படி இதுவரை படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சார்பில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. பின்னர் அதனை தொடர்ந்து படக்குழுவினர் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து படத்தின் வெற்றியினை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

படத்தின் வெளியீட்டிற்கு முன் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆன தில் ராஜூ, தமிழ்நாட்டில் விஜய் தான் பெரிய ஸ்டார் என பேசியது பெரும் விவாதங்களை கிளப்பியது. அதனை தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என அடுத்தடுத்து அவர் பேசிய அனைத்தும் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பியது.

இவரை தொடர்ந்து படத்தின் இயக்குநரான வம்சி படத்தின் மீதான விமர்சனங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், ’படத்தை எடுக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா. அனைவரும் உயிரை கொடுத்து உழைத்து வருகிறார்கள், அதை பற்றி பேசாதீர்கள்’ என பேசியதும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் இவை அனைத்தையும் தாண்டி படம் வசூலை குவித்து வருகிறது.

இதையும் படிங்க:LCU வில் இணையும் 'தளபதி 67' சூப்பர் அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்!

ABOUT THE AUTHOR

...view details