தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இரண்டாவது ஆண் குழந்தைக்குத் தாயான சௌந்தர்யா ரஜினிகாந்த் - ரஜினி

ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவி ற்கு பிறந்துள்ள இரண்டாவது குழந்தைக்கு ’வீர் ரஜின்காந்த்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது
சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது

By

Published : Sep 12, 2022, 6:35 PM IST

ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தற்போது இரண்டாவது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தயாரிப்பாளரும், அவரது கணவர் விசாகனும் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், "கடவுளின் அபரிவிதமான கிருபையுடனும், எங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும் 11/9/22 வேதின் தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி-ஐ வரவேற்பதில் நானும், வேதும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் அற்புதமான மருத்துவர்களான சுமனா மனோகர் மற்றும் டாக்டர் ஸ்ரீவித்யா சேஷாத்ரி அவர்களுக்கு மிகவும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சௌந்தர்யாவிற்கு இயக்குநர் செல்வராகவனின் மனைவியான இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் திரையுலகப் பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பணிப்பெண் இல்லத்திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் விக்ரம்!

ABOUT THE AUTHOR

...view details